சருமம் வறட்சியாக இருந்தால் தற்போது வெளியாகும் பலவிதமான தயாரிப்புகளை பெண்கள் பயன்படுத்தி வரும் நிலையில் நமது முன்னோர்கள் பயன்படுத்திய கடலை மாவு ஃபேஸ்பேக் செய்தால் முகம் பளபளப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சருமம் வறட்சியாக இருக்கும் போது சருமத்தில் ஈரப்பதத்தை மீட்டெடுக்க கடலை மாவு ரோஸ் வாட்டர் கலந்த கலவையை பயன்படுத்தலாம். மேலும் இது முகப்பரு பிரச்சனைகளையும் சரி செய்யும்.
கடலை மாவு, மஞ்சள் இரண்டையும் நன்றாக கலந்து கொண்டு சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். இதனை பேஸ்ட் வடிவில் வரும் வரை நன்றாக கலந்து முகம் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து அதன் பின் முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும்.
இவ்வாறு சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் ஈரப்பதம் ஏற்பட்டு பளபளப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
The post வறட்சியான சருமத்தை ஈரப்பதமாக்க கடலைமாவு ஃபேஸ்பேக் appeared first on Vanakkam London.