• Mon. Nov 17th, 2025

24×7 Live News

Apdin News

வலுவான வேட்பாளர் போட்டியிட்டால் தவெகவுக்கு வெற்றி: ஏ.சி.சண்முகம் கருத்து | A C Shanmugam says Tvk will win if strong candidate contests

Byadmin

Nov 17, 2025


ஓசூர்: புதிய நீதிக் கட்​சித் தலை​வர் ஏ.சி.சண்​முகம் ஓசூரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தேர்​தல் ஆணை​யத்​தின் எஸ்​ஐஆர் நடவடிக்கை வரவேற்​கத்​தக்​கது. வாஜ்​பாய் காலம் முதல் புதிய நீதிக் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யிலேயே தொடர்​கிறது. வரும் தேர்​தலில் நான் போட்​டி​யிட விரும்​ப​வில்​லை. கட்சி சார்​பில் நிர்​வாகி​கள் போட்​டி​யிடு​வார்​கள்.

தமிழகத்​தில் அதி​முக, திமுக கட்​சிகள்​தான் மாறி மாறி ஆட்​சிபுரிந்து வரு​கின்​றன. தமிழகத்​தில் மும்​முனை போட்டி இருந்​தா​லும் அதி​முக எளி​தாக ஆட்சி அமைத்​து​விடும். தவெகவுக்கு ஒவ்​வொரு தொகு​தி​யிலும் 25,000 – 50,000 வாக்​கு​கள் உள்​ளன. வலுவான வேட்​பாளர் போட்​டி​யிட்​டால் வெற்றி பெறலாம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.



By admin