0
இங்கிலாந்து, வடக்கு யோர்க்ஷயரில் (North Yorkshire) தமது குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட நாய் கடித்ததில் 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை (01) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மருத்துவ நிபுணர்கள் மற்றும் உதவிக்கு வந்த பொதுமக்கள் முயற்சி செய்த போதிலும், சிறுமி பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர் ஒருவரால் காருக்குள் நாய் பூட்டிவைக்கப்பட்டதாகவும் சம்பவ இடத்துக்கு வரைந்த அதிகாரிகளால் நாய் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக நாய் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
“இந்த துயரமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இருக்கின்றன. விசாரணைகள் தொடரும் போது அதிகாரிகள் குடும்பத்திற்கு ஆதரவாக உள்ளனர்.
“இந்தச் சம்பவத்தைப் பற்றி ஊகிக்க வேண்டாம், குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கவும், அவர்கள் நிம்மதியாக துக்கப்படுவதற்கு அனுமதிக்கவும் மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
“எங்களால் முடிந்தால் கூடுதல் தகவல்களை வழங்குவோம்” என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.