• Sun. Mar 1st, 2026

24×7 Live News

Apdin News

வளைகுடாவில் பதற்றம்: தமிழர்களின் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Byadmin

Mar 1, 2026


அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், அங்கு வசித்து வரும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.

தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில், அவசர நிலையை முன்னிட்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், இந்தியத் தூதரகங்கள் வழங்கும் அறிவுறுத்தல்களை கண்டிப்பாகப் பின்பற்றவும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு உடனடி உதவி அளிக்கும் வகையில் புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. அ

வசர உதவி தேவைப்படும் தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தொடர்புகொள்ள 24 மணி நேர கட்டணமில்லா உதவி எண்கள் 1800 309 3793 மற்றும் +91 80 6900 9900 அறிவிக்கப்பட்டுள்ளன.

நிலையமைப்பை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.

By admin