• Thu. Apr 3rd, 2025

24×7 Live News

Apdin News

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் சடலம்

Byadmin

Apr 2, 2025


வவுனியா, இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக அயலவர்கள் நெளுக்குளம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சடலத்துக்கு அருகேயுள்ள வயல் வெளியில் சேட் ஒன்றும் காணப்படுவதுடன், குறித்த சடலம் ஐந்து தொடக்கம் பத்து நாட்களுக்கு மேற்பட்டதாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.

தடவியல் பொலிஸாரின் உதவியுடன் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பதில் நீதிவான் த.ஆர்த்தியும் சடலத்தைப் பார்வையிட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

By admin