• Tue. Apr 1st, 2025

24×7 Live News

Apdin News

வவுனியாவில் கிணற்றில் இருந்து யுவதியின் சடலம் மீட்பு!

Byadmin

Mar 27, 2025


வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிஸாருக்குத்  தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், பெண்ணைச் சடலமாக மீட்டனர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி க.கரிபிரசாத் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயது யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

உடற்கூற்றுப் பரிசோதனைக்காகச் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

The post வவுனியாவில் கிணற்றில் இருந்து யுவதியின் சடலம் மீட்பு! appeared first on Vanakkam London.

By admin