• Mon. Apr 21st, 2025

24×7 Live News

Apdin News

வவுனியாவில் ‘சங்கு’ கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Byadmin

Apr 20, 2025


வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் ஜனநாயகத் தமிழ்க் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று நடைபெற்றது.

வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் செயலாளர் நாயகமுமான ந.சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தில் வவுனியா மாநகர சபை உட்பட நான்கு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்றது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலாே அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், புளாெட் அமைப்பின் பிரதிநிகள், ஜனநாயகப் பாேராளிகள் கட்சியின் பிரதிநிகள் மற்றும் வவுனியா மாநகர சபை, வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

By admin