• Sat. Jan 4th, 2025

24×7 Live News

Apdin News

வவுனியாவில் பஸ் மோதி 7 வயது சிறுவன் பலி!

Byadmin

Jan 1, 2025


வவுனியா, பாவற்குளம் பகுதியில் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (31) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பாவற்குளம், படிவம் இரண்டு பகுதியில் சாரதி பஸ்ஸை நிறுத்தி விட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்காக பஸ்ஸைச் செலுத்தினார். அவ்வேளை சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்கள் வீதியை ஊடறுக்க முற்பட்டபோது பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானார்கள்.

இதில் சைக்கிளில் பயணித்த 7 வயதுடைய அப்துல் மஜித் உமர் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

By admin