• Tue. Jan 7th, 2025

24×7 Live News

Apdin News

வவுனியாவில் மின்சாரம் தாக்கிக் குடும்பஸ்தர் சாவு!

Byadmin

Jan 6, 2025


மின்சாரம் தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாகச் சாவடைந்தார்.

இந்தச் சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த ஆலயத்தில் அமைந்துள்ள கேணியைத் துப்புரவாக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது நீர் இறைக்கும் இயந்திரத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டமையால் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்தார்.

அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி சாவடைந்தார்

சம்பவத்தில் 45 வயதுடைய கார்த்திக் என்ற குடும்பஸ்தரே சாவடைந்தார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post வவுனியாவில் மின்சாரம் தாக்கிக் குடும்பஸ்தர் சாவு! appeared first on Vanakkam London.

By admin