• Wed. May 13th, 2026

24×7 Live News

Apdin News

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு – Vanakkam London

Byadmin

May 13, 2026


முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை அனுஷ்டிக்கும் வகையில் வவுனியாவில் இலுப்பையடிப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்களுக்கு இன்று (12) காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியிருந்தனர்.

இறுதிப் போரின்போது உணவின்றி தவித்த மக்களுக்கு கஞ்சி எவ்வாறு உயிர் காக்கும் மருந்தாக அமைந்தது என்பதையும், அக்காலப் பகுதியில் மக்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரங்களையும் நினைவுபடுத்தும் விதமாக இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக கஞ்சியினை அருந்திச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.

By admin