2
வவுனியா சிறைச்சாலையில் கைதி மீது சிறைக்காவலர்கள் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக கைதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சிறைக்காவலர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த கைதி யாழ்ப்பாணம், உடுவில் பகுதியைச் சேர்ந்த சிவபாலன் லக்சன் எனத் தெரியவருகின்றது.
படுகாயமடைந்த சிறைக் கைதி வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறைக் கைதியின் உறவினர்களால் நேற்று (19) வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட கைதியின் உறவினர்கள், “இந்தச் சம்பவம் பற்றி தகவல் வெளியிடும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனச் சிறைக்காவலர்களால் கைதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.” – என்று தெரிவித்தனர்.