இங்கிலாந்தின் போல்டன் நகரில் நடந்த வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் போல்டனின் விகன் வீதியில் (Wigan Road), கார் மற்றும் டாக்ஸி நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக Greater Manchester Police (GMP) தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவரும் அடங்குவர்.
உயிரிழந்த மூவரும் போல்டனைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் வெட்டும் கருவிகளை பயன்படுத்தி வாகனங்களுக்குள் சிக்கியவர்களை மீட்டதாக GMP கூறியுள்ளது.
சம்பவ இடத்திற்கு அருகே வசிக்கும் நீலம் கான் என்ற பெண், விபத்திற்குப் பிறகான காட்சிகள் “மிகவும் அதிர்ச்சியளிப்பதாக” இருந்ததாக BBC North West Tonight-க்கு தெரிவித்துள்ளார்.
“வீதியெங்கும் சிதறிய துண்டுகள் பயமுறுத்தின. இந்த வீதியில் ஏற்கெனவே பல விபத்துகள் நடந்துள்ளன. ஆனால், மக்கள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை,” எனவும் அவர் கூறினார்.

The post வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம் appeared first on Vanakkam London.