• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

வாக்களிப்பு வீதம் வீழ்ச்சி! – தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிப்பு

Byadmin

Nov 15, 2024


இலங்கையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அண்ணளவாக 60 முதல் 65 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பாரிய அளவிலான எந்தவித முறைகேடும் பதிவாகவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெற்றன.

அந்தவகையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், நுவரெலியா மாவட்டத்தில் 68 சதவீத வாக்குகளும், வன்னி தேர்தல் மாவட்டத்தில்  65 சதவீத வாக்குகளும், மொனராகலை மாவட்டத்தில் 63 சதவீத வாக்குகளும், மாத்தறை மாவட்டத்தில் 64 சதவீத வாக்குகளும், மாத்தளை மாவட்டத்தில் 67 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 67 சதவீத வாக்குகளும், கேகாலை மாவட்டத்தில்  64 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் 65 சதவீத வாக்குகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 63 சதவீத வாக்குகளும், குருநாகல் மாவட்டத்தில் 64 சதவீத வாக்குகளும், புத்தளம் மாவட்டத்தில் 56 சதவீத வாக்குகளும், பொலனறுவை மாவட்டத்தில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், அம்பாறை மாவட்டத்தில் 62 சதவீத வாக்குகளும், காலி மாவட்டத்தில் 64 சதவீத வாக்குகளும், அனுராதபுரம் மாவட்டத்தில் 65 சதவீத வாக்குகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 சதவீத வாக்குகளும், திருகோணமலை மாவட்டத்தில் 67 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

The post வாக்களிப்பு வீதம் வீழ்ச்சி! – தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிப்பு appeared first on Vanakkam London.

By admin