• Mon. Aug 25th, 2025

24×7 Live News

Apdin News

வாக்குகளை பெறுவதற்காக விஜயகாந்த் பெயரை விஜய் பயன்படுத்தினால் மக்கள் ஏற்க மாட்டார்கள்: பிரேமலதா திட்டவட்டம் | Premalatha says people will not accept Vijay if he uses Vijayakanth name to get votes

Byadmin

Aug 25, 2025


சென்னை: விஜய​காந்த் பெயரை பயன்​படுத்தி அவருடைய வாக்​கு​களை விஜய் பெற நினைத்​தால் மக்​கள் அதை ஏற்​றுக்​கொள்ள மாட்​டார்​கள் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​தார்.

தேமு​திக நிறு​வனத் தலை​வர் விஜய​காந்​தின் 73-வது பிறந்​த​நாள் இன்று கொண்​டாடப்பட உள்ள நிலை​யில், கட்சி தலைமை அலு​வல​கத்​தில் நேற்று மருத்​துவ முகாம், ரத்​த​தான முகாமை கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தொடங்கி வைத்​தார்.

அதைத்​தொடர்ந்து தள்​ளுவண்​டி, அயன் பாக்​ஸ், தையல் இயந்​திரம் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு மூன்று சக்கர நாற்​காலிகள், மாணவ மாணவி​களுக்கு கல்வி உதவித்​தொகை உள்​ளிட்ட நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​னார்.

ராமாபுரம் எம்​ஜிஆர் காது கேளாதோர் பள்​ளிக்கு மதிய உணவு மற்​றும் நிதி​யுத​வி​யாக ரூ.50 ஆயிரம், டெல்லி தமிழ் சங்​கத்​துக்கு கல்விக்​காக ரூ.1 லட்​சம் காசோலை வழங்​கப்​பட்​டது. தொடர்ந்து கேப்​டன் முரசு புத்​தகத்​தை​யும் பிரேமலதா வெளி​யிட்​டார். அதன் தொடர்ச்​சி​யாக பொது​மக்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கி​னார். பின்​னர் செய்தியாளர்​களிடம் பிரேமலதா கூறிய​தாவது:

முதல்​கட்ட சுற்​றுப்​பயணத்தை வெற்​றிகர​மாக முடித்​துள்​ளோம். மக்​களிடையே அன்​பும் ஆரவார​மும் கிடைத்​தது. தூய்மை பணியாளர்​கள் உயிரை பணயம் வைத்​து​தான் பணி செய்​கிறார்​கள். தூய்மை பணி​யாளர்​கள் பணிநிரந்​தரம், பழைய ஊதி​யம் கோரி ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். ஆனால் அரசு வீடு தரு​கிறோம், கல்வி உதவித்​தொகை தரு​கிறோம், காலை உணவு தருகிறோம் என்று அறி​வித்​துள்​ளனர். தூய்மை பணி​யாளர்​கள் நன்றி சொல்​வது போல் செய்​தி​கள் போட்டு ஒரு மாயையை தான் உரு​வாக்கி உள்​ளனர்.

விஜய் சின்ன பைய​னாக இருக்​கும்​போது இருந்தே விஜய​காந்த் அவரை பார்த்து வந்​துள்​ளார். எப்​போதும் விஜய் எங்களுடைய பையன்​தான். விஜய​காந்த் வாக்​கு​களை பிடிக்க விஜய் அவரை பயன்​படுத்​துகிறார் என்​றால், அப்​படி எது​வும் நடக்​காது. ஏனென்றால் எங்​களுக்கு என்று ஒரு கட்சி உள்​ளது.

எங்​கள் கட்சி 20 ஆண்டு கட்​சி, எதிர்க்​கட்​சி​யாக​வும் இருந்​துள்​ளது. விஜய​காந்த் இடத்தை யாராலும் பிடிக்க முடி​யாது. விஜய​காந்த் பெயரை சொல்லி ​விஜய் வாக்​கு​களை எடுக்​கிறார் என்​றால் மக்​கள் அதை ஏற்​று​கொள்ள மாட்​டார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்​.



By admin