• Thu. Apr 23rd, 2026

24×7 Live News

Apdin News

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு தவெக தலைவர் கடிதம்

Byadmin

Apr 23, 2026


தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

நீலாங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தவெக தலைவர் விஜய் வாக்களித்தார்.

தமிழக அரசியலில் களமிறங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது வாக்கினை செலுத்தினார். இதுவரை நடிகராக தனது வாக்கினை செலுத்திய விஜய் முதன்முறையக முதல்வர் வேட்பாளராக தனது வாக்கினை செலுத்தினார்.

இந்நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரத்தை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

சொந்த ஊர் செல்வதற்கு பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் பேருந்து நிலையங்களில் தவித்து வருவதால், அவர்கள் வாக்களிக்க ஏதுவாக இரவு 8 மணி வரை வாக்குப்பதிவை நீட்டிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம் எழுதி இருக்கிறார்.



By admin