327
வணக்கம் இலண்டன் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் காலம் மகிழ்வையும் வளத்தையும் அள்ளி வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும்.
எல்லோரும் அன்புடனும் சமாதானத்துடனும் சமத்துவத்துடனும் இனிமையைப் பகிர்ந்து வாழ்கின்ற இனிய காலமாய் அமையப் பிரார்த்தனை.ஈழத் தமிழர்களின் வாழ்வை சூழ்ந்த இன்னல்கள் நீங்கி, விடுதலையும் சுதந்திரமும் கொண்ட வாழ்வு மலர இறையருளை வேண்டி நிற்கிறோம்.
ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் நாள் (சித்திரை 1) தமிழ் புத்தாண்டு தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
முக்கிய பண்டிகை நாட்களில் ஒன்றான இந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் சூரியன் முதல் ராசியான மேஷத்தில் பெயர்ச்சியாகும். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகின்றது.
விசுவாவசு என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, மலர்ந்துள்ளது.
சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நாளை அதிகாலை 2 மணி 29 நிமிடத்துக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, நாளை அதிகாலை 3 மணி 21 நிமிடத்துக்கும் விசுவாவசு வருடம் பிறக்கிறது.
புண்ணியகாலம்
விஷு புண்ணியகாலம் – 13.04.2025 ஞாயிறு இரவு 10.29 மணி முதல் 14.04.2025 திங்கட்கிழமை காலை 6.29 மணி வரை. ( தலைக்கு – ஆலிலை , காலுக்கு -இலவமிலை )
ஆடை நிறம் : – சிவப்பு , நீலம்
கைவிஷேட நேரங்கள் : – 14.04.2025 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும்.
ஆதாய விடயம்
மேஷம் – 2 வரவு 14 செலவு
இடபம் – 11 வரவு 5 செலவு
மிதுனம் – 14 வரவு 2 செலவு
கடகம் – 14 வரவு 8 செலவு
சிம்மம் – 11 வரவு 11 செலவு
கன்னி – 14 வரவு 2 செலவு
துலாம் – 11 வரவு 5 செலவு
விருச்சிகம் – 2 வரவு 14 செலவு
தனுசு – 5 வரவு 5 செலவு
மகரம் – 8 வரவு 14 செலவு
கும்பம் – 8 வரவு 14 செலவு
மீனம் – 5 வரவு 5 செலவு
தோஷ நட்சத்திரங்கள்
திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து, தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.