• Wed. Jun 17th, 2026

24×7 Live News

Apdin News

வாயேஜர்: சூரிய குடும்பத்தைப் பற்றிய நமது பார்வையை மாற்றிய விண்கலம்

Byadmin

Jun 16, 2026


வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம், Nasa/JPL-Caltech

    • எழுதியவர், ஃபெர்னான்டோ துவார்டே
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

1977-ஆம் ஆண்டு நாசா விண்ணில் செலுத்திய இரட்டை விண்கலங்களில் ஒன்றான வாயேஜர் 1 விண்கலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் பூமியில் இருந்து ஓர் ஒளி நாளைக் கடந்திருக்கும். ஒளி நாள் என்பது ஒரு நாளில் ஒளி பயணிக்கும் தூரம், அதாவது கிட்டத்தட்ட 26 பில்லியன் கிலோமீட்டர்.

மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தப் பொருளை விடவும் நீண்ட தூரத்தை வாயேஜர் 1 கடந்துவிட்டது. அதன் மைலேஜை விடவும் அந்த விண்கலத்தில் இருந்து தற்போதும் நாசாவுக்கு தகவல் வந்து கொண்டிருப்பது தான் அசாத்தியமானதாக உள்ளது.

ஐந்து ஆண்டுகள் நிலைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்ட வாயேஜர் 1 மற்றும் 2 விண்கலங்கள் விண்வெளியில் 50 ஆண்டுகள் கழித்தும் செயல்பாட்டில் உள்ளன.

அவை வானியலாளர்களுக்குப் பிரபஞ்சம் பற்றிய விலைமதிப்பில்லாத தகவல்களை வழங்கி கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் தொன்மையானதாக கருதப்படும் தொழில்நுட்பத்தில் இயங்கி வருவது தான் ஆச்சரியத்தின் உச்சம்.

“உங்கள் காரைத் திறப்பதற்கான ரிமோட் சாவியில் இருக்கின்ற அளவிலான நினைவகம் தான் வாயேஜரில் உள்ள கணினியில் இருக்கின்றன,” என்று வாயேஜர் திட்டத்தின் தற்போதைய விஞ்ஞானியான முனைவர் லின்டா ஸ்பில்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

By admin