0
2025ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சூரியன் சுமார் 1,650 மணிநேரம் வெப்பம் வீசியது, இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த அளவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்து கடந்த காலங்களில் இல்லாத அளவு கடும் வெப்ப அலை மற்றும் நீடித்த வறட்சி நிலவியதால், 2025ஆம் ஆண்டு வரலாற்றில் மிக வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது.
அறிவியலாளர்கள் இதனை பருவநிலை மாற்றத்தின் தெளிவான அறிகுறி எனக் குறிப்பிடுகிறார்கள். முன்னர் 2022ஆம் ஆண்டு மிக வெப்பமான ஆண்டாக இருந்த நிலையில், 2025 இந்த வரலாற்று சாதனையை புதுப்பித்துள்ளது. கடந்த ஆண்டில் நீடித்த வறட்சி, வாரங்களாக தொடர்ந்த கடும் வெப்பநிலை, மற்றும் குறைந்த மழை போன்ற காரணங்கள் இவ்வெப்பத்தை உருவாக்கியுள்ளன.
இந்த சூழ்நிலையில் தண்ணீர்ப் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் காட்டுத்தீச் சம்பவங்கள் எட்டும் அளவுக்கு அதிகரித்து, வசந்த காலத்தில் மட்டும் 12,000க்கும் மேற்பட்ட தீச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மும்மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.
உலகளாவிய அளவிலும், 2025ஆம் ஆண்டு வரலாற்றில் அதிக வெப்ப நிலையைப் பதிவுசெய்த முதல் மூன்று ஆண்டுகளில் ஒன்றாக உள்ளது. குவைத், இந்தியா போன்ற நாடுகள் உலகளாவிய அளவில் மிக அதிக வெப்பநிலையை அனுபவித்துள்ளன.