• Thu. Oct 3rd, 2024

24×7 Live News

Apdin News

வார இறுதி, காலாண்டு விடுமுறை நிறைவை முன்னிட்டு அக்.4,5-ல் 860 சிறப்பு பேருந்துகள் இயக்கம் | special buses for weekend leave

Byadmin

Oct 3, 2024


சென்னை: வார இறுதி நாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து, வரும் 4, 5-ம் தேதிகளில் 860 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், சிறப்புபேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அக்டோபர் 5, 6-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு 4, 5-ம் தேதிகளில் 520 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை,வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருவுக்கு 110 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 30 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மொத்தம் 860 பேருந்துகள் இயக்கப்படும். இப்பேருந்துகளில் பயணம் செய்ய www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.



By admin