
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
வால்பாறை – பொள்ளாச்சி மலைப்பாதையில் வேன் ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். இத்தகவலை கோவை மாவட்ட ஆட்சியர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.
வேனில் பயணம் செய்த 16 நபர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் தெரிவித்தார்.
கேரளா மாநிலம் மலப்புரம் பகுதி சேர்ந்த 16 பேர் சுற்றுலா வேனில் நேற்று முன்தினம் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
வால்பாறை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு இன்று மாலை பொள்ளாச்சி வழியாக கேரளா செல்ல வேனில் வந்து கொண்டிருந்தபோது வால்பாறை மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது இந்த வேன் விபத்துக்குள்ளானது.