1
தேவையான பொருள்கள்
வாழைத்தண்டு, எலுமிச்சம் பழம் தலா 1
தேங்காய் துருவியது 1 மேசைக்கரண்டி
பெருங்காயம், கறிவேப்பிலை சிறிதளவு
உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
கடுகு அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு சிறிதளவு
பச்சை மிளகாய் 5
செய்முறை
நறுக்கிய வாழைத்தண்டை ஆவியில் ஐந்த நிமிடங்கள் வேகவைக்கவும்.
வாழைத்தண்டு வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி, உப்பு, தேங்காய், மிளகாய் சேர்த்து சட்னி பதத்துக்கு அரைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி கலக்கவும்.
கடைசியாக, தேவையான அளவு எலுமிச்சம் பழச் சாறை சட்னியில் பிழிந்துவிட்டு நன்றாகக் கலக்கினால், சத்தான சட்னி தயார்.