• Fri. Jan 2nd, 2026

24×7 Live News

Apdin News

வாழ்வின் நிதர்சனம்… | விண்ணவன்

Byadmin

Jan 2, 2026


கலக்கங்கள் எனை
சூழ்ந்த வேளைகளோ
எத்தனை – பலருமே
எனை விட்டுச்சென்ற
வேளைதனில்

கண்களில் கண்ணீருடனும்
விழிகளில் ஏக்கங்களுடனும்
பல நாட்கள்

கனத்திடும் நினைவுகளுடன்
பல இரவுகள்;
கண்ட கனவுகள்
கை நழுவி சென்றிடும்
வேளைதனிலே
உயிரை பிழிந்திடும்
வலிகளும்;

இவை அனைத்துமே
வாழ்க்கையின் அர்தங்களாய்
இன்றும் அன்றும் என்றும்
எனை வளப்படுத்தி
வருகின்றனவே!!!

வேதனைகள் பல
தந்தாலுமே – இவையே
நிதர்சனம்…

நிதர்சனத்தை நினைத்து
வருந்துவதை விட
அதை ஏற்று நடப்பதே
வாழ்வின் எழுச்சிக்கு
வழிவகுக்கும் என;
நான் அறிந்தேன் – உணர்ந்தேன் – தெழிந்தேன்

நீங்கள் என்று
உணரப்போகிறீர்கள்??
வாழ்வை உணரப்போகிறீர்கள்???

வலிகளிலே வெற்றி
பிறக்கிறது; வலிகளை
வென்று வாழ்வில்
சாதனைகளை தமதாக்கிக்கொள்ள
விரைந்திடுங்கள்!!!

விண்ணவன்
குமுழமுனை

The post வாழ்வின் நிதர்சனம்… | விண்ணவன் appeared first on Vanakkam London.

By admin