• Mon. May 12th, 2025

24×7 Live News

Apdin News

விக்ரம் மிஸ்ரி சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுவது ஏன்? அவரது முழு பின்னணி

Byadmin

May 12, 2025


விக்ரம் மிஸ்ரி, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்கு ஆளானதைத் தொடர்ந்து, பலரும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு சனிக்கிழமை மாலை ஒரு உடன்பாட்டை எட்டிய பிறகு, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் உள்ள தனது பயனர் கணக்கை தனிப்பட்ட ஒன்றாக (protected mode) ஞாயிற்றுக்கிழமை மாற்றியதைக் காண முடிந்தது.

அதாவது தனிப்பட்ட கணக்காக மாற்றப்பட்டுவிட்டதால், அவரது எக்ஸ் பக்கத்தில் இனி யாரும் கருத்து தெரிவிக்க முடியாது.

இந்தியா–பாகிஸ்தான் மோதலின் போது, விக்ரம் மிஸ்ரி இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஊடகங்களிடம் தொடர்ந்து முன்வைத்து வந்தார்.

தாக்குதல்களை நிறுத்துவதற்கான உடன்பாட்டை சனிக்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்தவர் விக்ரம் மிஸ் தான்.

By admin