4
சுற்றுப்பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு அவர்களின் 5 ஆண்டுகள் சமூக ஊடகப் பதிவுகள் பற்றி ஆராய அமெரிக்கா திட்டமிடுகிறது.
இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் பரிந்துரை முன்வைத்துள்ளனர்.
அமெரிக்காவில் 90 நாள்களுக்கு விசா இன்றி தங்க அனுமதியுள்ள 42 நாடுகளுக்கும் புதிய விதி பொருந்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, கனடாவுடனும் மெக்சிகோவுடனும் சேர்ந்து அடுத்த ஆண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளை ஏற்றுநடத்துகிறது. அதற்காக உலகெங்கிலும் இருந்து சுற்றுப்பயணிகள் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தேசியப் பாதுகாப்பைக் கருதி, இந்தப் புதிய விதியை அறிமுகம் செய்ய எண்ணுவதாக வாஷிங்டன் (Washington) கூறியுள்ளது.