• Tue. Apr 15th, 2025

24×7 Live News

Apdin News

விசுவாவசு: தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர் வந்தது எப்படி?

Byadmin

Apr 14, 2025


சமஸ்கிருதம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

(தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிபிசி தமிழின் பழைய கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது)

தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றும் சமஸ்கிருதப் பெயர்களைச் சொல்லியே குறிப்பிடப்படுகின்றன. அறுபதாண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் பயன்படுத்தப்படும் இந்தப் பெயர்ப் பட்டியல் தமிழ் ஆண்டுகளோடு இணைந்தது எப்படி?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு புத்தாண்டு நெருங்கும்போதும், “தமிழ் புத்தாண்டு என்பது தை மாதம் பிறக்கிறதா அல்லது சித்திர மாதம் பிறக்கிறதா?” என்ற சர்ச்சையோடு, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் அவை எப்போதிருந்து புழக்கத்திற்கு வந்தன என்ற கேள்வியும் எழுப்பப்படும். இது ஒரு முடிவில்லாத சர்ச்சை.

தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்கம் துல்லியமாக எப்போதிருந்து துவங்கியது, ஏன் துவங்கியது என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடையாது.

By admin