1
கொழும்பு கோட்டை பகுதியில் இன்று புதன்கிழமை (21) தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் பாவனை செய்யும் பஸ் சாரதிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள “தேசிய வீதி பாதுகாப்பு” வேலைத்திட்டத்தின் கீழ் இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசேட சோதனையில், கொழும்பு கோட்டை பகுதிக்கு வருகை தந்த பஸ்களின் சாரிகள் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட வேளையில் அவர்களில் சிலர் மதுபானம் உள்ளிட்ட ஏனைய போதைப்பொருட்களை பாவனை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து போதைப்பொருள் பாவனை செய்யும் பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட சோதனை நடவடிக்கை இனிவரும் காலங்களிலும் நாடு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.