• Sat. Sep 13th, 2025

24×7 Live News

Apdin News

விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் விவகாரம்: சீமானுக்கு கெடு விதித்தது உச்ச நீதிமன்றம்  | Supreme Court sets deadline for Seeman

Byadmin

Sep 13, 2025


புதுடெல்லி: தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக்​ கூறி பாலியல் ரீதி​யாக ஏமாற்​றி​விட்​ட​தாக நடிகரும், நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாள​ரு​மான சீமான் மீது நடிகை விஜயலட்​சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசர​வாக்​கம் காவல் நிலை​யத்​தில் பாலியல் புகார் அளித்​தார்.

அதன்​பேரில் போலீ​ஸார் சீமான் மீது பாலியல் துன்​புறுத்​தல் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு வழக்​குப் பதிவு செய்​திருந்​தனர். இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி சீமான் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, கடந்த பிப்​.17 அன்று சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடி​யாது, என மறுப்பு தெரி​வித்​தார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுக்கு தடைகோரி சீமான் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தார். இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி பி.​வி.​நாகரத்னா தலை​மையி​லான அமர்​வு, சீமானுக்கு எதி​ரான பாலியல் வழக்கு விசா​ரணைக்​கும், உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வுக்​கும் இடைக்​கால தடை விதித்து கடந்த மார்ச் மாதம் உத்​தர​விட்​டிருந்​தது. விஜயலட்​சுமிக்கு உரிய இழப்​பீடு வழங்​கு​வது தொடர்​பாக இருதரப்​பிலும் சமரச​மாக பேசி முடி​வெடுக்க வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டிருந்​தது. இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​த​போது இருதரப்​பிலும் பதிலளிக்க 4 வார காலம் அவகாசம் அளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி.நாகரத்​னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது விஜயலட்​சுமி தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் ஷாதான் ஃபராஸத் ஆஜராகி, இந்த விவ​காரத்​தில் சமரசத்​துக்கு வாய்ப்​பில்லை என்​றும், விஜயலட்​சுமி குறித்​தும் சீமான் ஏற்​கெனவே அவதூறாகப் பேசி​யுள்​ளார். இதில் மனமுடைந்த அவர் கடந்த 2020-ம் ஆண்டு தற்​கொலைக்கு முயன்​றுள்​ளார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் இரு​வரும் பரஸ்பர சம்​மதத்​துடன்​தான் பாலியல் உறவில் இருந்​துள்​ளனர் என வாதிட்​டார்.

அதையடுத்து நீதிப​தி​கள், ‘‘இரு​வரும் என்ன செய்​தார்​கள் என்​பது அவர்​களுக்கு மட்​டும் தான் தெரி​யும். தெரி​யாது எனச்​சொல்ல அவர்​கள் ஒன்​றும் சின்ன குழந்​தைகள் அல்ல. இந்த விவ​காரத்​தில் இருந்து விடு​பட்டு இரு​வரும் சுதந்​திர​மான, நிம்​ம​தி​யான வாழ்க்​கையை தொடர வேண்​டும் என விரும்​பு​கிறோம்.

எதிர்​காலத்​தில் விஜயலட்​சுமிக்கு எந்த தொந்​தர​வும் கொடுக்க மாட்​டேன் என்​றும், விஜயலட்​சுமி மீதான அவதூறு கருத்​துக்​களை​யும், குற்​றச்​சாட்​டு​களை​யும் வாபஸ் பெற்​றுக் கொள்​கிறேன் என்​றும், இந்த விவ​காரத்​தில் மன்​னிப்பு கோரி சீமான் விளக்க மனு தாக்​கல் செய்ய வேண்​டும். அப்​படி செய்​தால் அவர் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்​வது குறித்து யோசிப்​போம். தவறும்​பட்​சத்​தில் சீமான் தாக்​கல் செய்​துள்ள இந்த மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்​யப்​படும்’’ எனக்​கூறி சீமான் மீதான பாலியல் வழக்கு வி​சா​ரணைக்கு வி​திக்​கப்​பட்​ட இடைக்​காலத்​ தடையை வரும்​ செப்​.24 வரை நீட்​டித்​தும்​, சீமானுக்​கு கெடு வி​தித்​தும்​ உத்​தரவிட்​டுள்​ளனர்​.



By admin