• Tue. Mar 31st, 2026

24×7 Live News

Apdin News

விஜயின் புதிய பாணி: விஜயின் திரைப்படங்களும் அரசியலும் கூறுவது என்ன?

Byadmin

Mar 31, 2026


விஜய், தவெக, அரசியல், திரையுலகம்

பட மூலாதாரம், TVK

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தயக்கம் மிகுந்த நாயகனாக 33 ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜய், இப்போது அரசியலில் தனது முதல் தேர்தலை சந்திக்கவிருக்கிறார். இந்த நீண்ட காலகட்டத்தில் அவரது தனி வாழ்வும் திரைவாழ்வும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால், அரசியலில் விஜய் ஒரு புதிய பாணியை கையாளுகிறார்.

விஜயின் திரைப்படங்களும் அவரது அரசியலும் சொல்வது என்ன?

விஜயை நேரில் சந்திக்கும் யாரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு அம்சம் உண்டு. அதாவது, திரையில் துறுதுறுப்பாகத் தென்படும் விஜய், நேரில் பார்க்கும்போது முற்றிலும் மாறானவராக நடந்துகொள்வார். திரையில் பார்த்த ஒரு கலகலப்பான மனிதரை எதிர்பார்த்துச் சென்றால், பேசவே தயங்கக்கூடிய, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் ஒரு நபராக இருப்பார் விஜய். “பத்து வயதிலேயே தங்கையை இழந்துவிட்டு, பெற்றோரின் ஒரே குழந்தையாக வளர்ந்ததும் தன் வயதுக்கேற்ற ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகள் இல்லாததும் அதற்குக் காரணமாக இருக்கலாம்” என ஒரு முறை தெரிவித்தார் விஜய்.

அப்படிப்பட்ட ஒரு நபர், தனது புதிய கட்சியின் அரசியல் மேடைகளில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் முழங்குகிறார். புதியவர்களிடம் பேசத் தயங்கும் இளைஞராகத் துவங்கி, ஒரு கட்சியின் தலைவராகப் பரிணாமம் எடுத்திருக்கும் விஜயின் பயணம் சாதாரணமானதல்ல.

எட்டாம் வகுப்பில் தொடங்கிய நடிப்பு

விஜய் சிறுவனாக இருக்கும்போதே நிகழ்ந்த தங்கை வித்யாவின் மரணம் அவரை வெகுவாகப் பாதித்தது. அவரே சொன்னபடி, மேலும் அமைதியானவராக மாறினார் விஜய்.

By admin