• Mon. Jan 26th, 2026

24×7 Live News

Apdin News

விஜயை திடீரென தாக்கிய அதிமுக – கூட்டணி விவகாரத்தில் விஜய் உணர்ந்தது என்ன?

Byadmin

Jan 26, 2026


விஜயை திடீரென 'தாக்கிய' அதிமுக – கூட்டணி விவகாரத்தில் விஜய் உணர்ந்தது என்ன?

பட மூலாதாரம், X/TVK

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் இறுதியாகிவரும் நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் அ.தி.மு.கவையும் கடுமையாக விமர்சிக்கத் துவங்கியிருக்கிறார். மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்த அ.தி.மு.கவும் பதிலடி கொடுக்கத் துவங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று மாமல்லபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், வழக்கத்தைப் போல தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்தார்.

அதே நேரத்தில், அ.தி.மு.க. மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தது, பலரது புருவங்களையும் உயர்த்தியது. இதையடுத்து, அ.தி.மு.கவும் பதிலடி கொடுக்கத் துவங்கியிருக்கிறது.

விஜய் பேசியது என்ன?

மாமல்லபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய விஜய், தனது பேச்சின் துவக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பா.ஜ.க. அழுத்தம் தருவதாக வெளிவரும் யூகங்கள் குறித்துப் பேசினார். இதற்கடுத்ததாக தி.மு.க. – அ.தி.மு.க. குறித்து பேச ஆரம்பித்தார்.

“தமிழகத்தை இதற்கு முன் ஆண்டவர்கள் பா.ஜ.கவுக்கு நேரடியாக ‘சரண்டர்’ ஆனார்கள். இப்போது ஆண்டு கொண்டிருப்பவர்கள் மறைமுகமாகச் ‘சரண்டர்’ ஆகியிருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபிறகு, இதற்கு முன் இருந்தவர்களைப் போலவோ அல்லது இப்போது இருப்பவர்களைப் போலவோ ஒரு பைசா கூட ஊழல் செய்ய மாட்டேன். ஊழல் சக்தி, தீய சக்தி ஆகிய இருவரும் தமிழகத்தை ஆளவே கூடாது” என்று குறிப்பிட்டார்.

By admin