• Wed. Aug 12th, 2026

24×7 Live News

Apdin News

விஜய்க்கு போட்டியாக தனுஷ் அரசியலுக்கு வருவாரா? என்ன நடக்கிறது?

Byadmin

Aug 12, 2026


தனுஷ்

பட மூலாதாரம், V4 STUDIO

நடிகர் தனுஷின் சமீபத்திய செயல்பாடுகள், பேச்சு மற்றும் அவரைப் பற்றி வெளிவந்த கருத்துகள் ஆகியவை அவரின் அரசியல் வருகைக்கான “அறிகுறியா” என சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இதனிடையே, கோவை மாவட்டத்தில் தொகுதிவாரியாக தனுஷ் நற்பணி மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை துவங்கியிருப்பது இந்த விவாதத்தை வலுப்படுத்தியுள்ளது.

ஆனால், இது வழக்கமாக நடக்கும் விஷயம்தான் என்றும், முன்பு மாவட்ட வாரியாக நடந்ததை தற்போது தொகுதிவாரியாக சேர்ப்பதாகவும் கூறுகிறார் திரைப்பட இயக்குநரும், அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கத்தின் தலைவருமான சுப்பிரமணிய சிவா.

அரசியலில் வருவது பற்றி தனுஷ்தான் முடிவெடுப்பார் என்றும் அவர் பிபிசியிடம் கூறினார். இதுபற்றி தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசிய போது, ”நீங்கள் சொல்லித்தான் இப்படி ஒரு தகவல் பரவிக்கொண்டிருப்பதே எனக்குத் தெரிகிறது.” என்றார்.

தொடர் செயல்பாடுகள்

கடந்த ஜூலை 28ஆம் தேதி தனுஷ் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். அப்போது ரசிகர்களிடம் பேசும்போது சில விஷயங்களை அவர் குறிப்பிட்டார்.

அப்போது பேசிய தனுஷ், ”நம் ஒற்றுமைக்கு பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் இருக்கிறது. பிறந்தநாளுக்கு வந்தோம், புகைப்படம் எடுத்தோம் என்றில்லாமல் உங்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் உதவுங்கள். நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள். அதற்கு எல்லோரும் கைகோர்க்க வேண்டும். அதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.” என்று பேசியிருந்தார்.

By admin