0
நடிகர் அஜய் திஷான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பூக்கி’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘புடிக்கல புடிக்கல..’ எனத் தொடங்கும் புதிய பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் ‘பூக்கி ‘எனும் திரைப்படத்தில் அஜய் திஷான், ஆர் கே. தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு , இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி ஆகியோருடன் விஜய் அண்டனி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் .
விஜய் அண்டனி இசையமைத்து படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை மீரா விஜய் அண்டனி வழங்குகிறார்.
எதிர்வரும் 13 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘புடிக்கல புடிக்கல..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் லாவரதன் எழுத பின்னணி பாடகர் சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் பின்னணி பாடகி ருக்ஷார் பந்துக்யா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கான காணொளி வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.