இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி கதையின் நாயகனாக அதிரடி எக்சன் அவதாரத்தில் நடித்திருக்கும் ‘சக்தி திருமகன்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள’ சக்தி திருமகன்’ எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி, வாகை சந்திரசேகர், சுனில் கிருபளானி, செல் முருகன், திருப்பதி ரவீந்த்ரா, கிரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷெல்லி ஆர். காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி பிலிம் கோர்ப்பரேசன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் அண்டனி தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 19ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகள் ….அரசியல் ரீதியிலான ஊழல் மோசடிகள் குறித்து ஹீரோயிசம் பாணியிலான எக்சன் திரைப்படமாக இருப்பதால்… ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
The post விஜய் அண்டனி நடிக்கும் ‘சக்தி திருமகன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு appeared first on Vanakkam London.