• Tue. Feb 3rd, 2026

24×7 Live News

Apdin News

விஜய் எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம் செய்வது ஏன்? தேர்தலில் இத்திட்டம் பலனளிக்குமா?

Byadmin

Feb 2, 2026


எம்.ஜி.ஆருக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்துகிறாரா விஜய்?

பட மூலாதாரம், @TVKHQITWingOffl

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது ஆண்டின் துவக்க விழாவில் பேசிய விஜய், எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கட்சி துவங்கியதிலிருந்தே தி.மு.கவை கடுமையாக விமர்சித்துவரும் விஜய், இதற்கு முன்பும் இதேபோல, எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவை விமர்சித்திருக்கிறார். அவரது இந்த வியூகத்திற்குப் பலன் கிடைக்குமா?

தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டு துவங்கும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை நிலையத்தில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஜய் பேச்சின் துவக்கத்திலிருந்தே எம்.ஜி.ஆரை முன்னிறுத்திப் பேச ஆரம்பித்தார்.

“தமிழ்நாட்டில் மிகப் பெரிய கட்சியாக நாம் வளர்ந்திருப்பதற்கு காரணம் நீங்கள்தான். 1977 ஜூன் மாதத்தில் எம்.ஜி.ஆர். வானொலியில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் பேசும்போது ‘பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில், இப்படிப் பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டுவிட்டது எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன். அன்று அந்தக் கண்ணீரைத் துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் அ.தி.மு.க.’ என்று சொன்னார். 2017க்குப் பிறகு, 2021க்குப் பிறகு தமிழ்நாட்டின் நிலையை யோசித்துப் பார்த்த தமிழக மக்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டுவிட்டதே என கண்ணீர் வடித்தார்கள். இன்று இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம்” என்றார்.

விஜய் எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம் செய்வது ஏன்? தேர்தலில் இத்திட்டம் பலனளிக்குமா?

பட மூலாதாரம், @TVKHQITWingOffl

தேர்தல் களம் பற்றி என்ன சொன்னார்?

தொடர்ந்து, “எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த பிறகு, அவர் வெற்றிபெற்ற பிறகுகூட, சட்டசபையில் ஒரு நடிகர் கட்சி வந்திருக்கிறது என கேலியும் கிண்டலும் செய்தார்கள். அதைப்போலத்தான் நாம் அரசியலுக்கு வந்த பிறகும், இந்த விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது? எம்.ஜி.ஆருக்கு என்ன அனுபவம் இருந்தது தெரியுமா? 1952லிருந்து 72வரை தி.மு.கவில் இருந்தார் என்று சொன்னார்கள். பிறகு அதே வாயால், எம்.ஜி.ஆரைப் பார்த்து அவருக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது, கேள்வி மட்டும்தான் கேட்கத் தெரியும், டெல்லியை பகைத்துக்கொள்ள மாட்டார் என்று சொன்னார்கள். எம்.ஜி.ஆரை மட்டுமல்ல அவருடைய தொண்டர்களைக்கூட விட்டுவைக்கவில்லை. அவர்களையும் கேலி செய்தார்கள்.

By admin