• Mon. Apr 21st, 2025

24×7 Live News

Apdin News

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Byadmin

Apr 21, 2025


 

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஏஸ்’ (ACE) எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியைப் படக்குழுவினர் பிரத்தியேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ்’ ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் தயாரித்திருக்கிறார்.

 

இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர்-  காணொளி – பாடல்-  ஆகியவை வெளியாகி பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விஜய் சேதுபதியின் இரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

By admin