0
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி விரிவுபடுத்தப்பட்ட சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடித்திருக்கும் ‘காதல் கதை சொல்லவா’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் சனில் களத்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் கதை சொல்லவா’ எனும் திரைப்படத்தில் ஜெயராம், ஆத்மியா, நகுல், ரித்திகா சென், ரமேஷ் திலக் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஷாஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம் . ஜெயசிந்திரன் – சரத் ஆகிய இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஃபீல் குட் லவ் ஸ்டோரியாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பெப்பர்மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் அமெயா ஜெயின் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆறாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் ராஜ்கபூர், கே. எஸ். அதியமான், இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், கன்னட நடிகர் ரஞ்சித் குமார், ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” மனிதர்கள்- நம்பிக்கை- காதல்- தியாகம்- மனிதநேயம்- இவற்றை உணர்வு பூர்வமான ஃபீல் குட் லவ் ஸ்டோரியாக இப்படம் தயாராகி இருக்கிறது. மூன்று வகையினதான கோணங்களில் இப்படத்தின் திரைக்கதை பயணிக்கிறது. இது ரசிகர்களை கவரும் என உறுதியாக நம்புகிறேன் ” என்றார்.