இந்த ஆண்டில் ‘ஏஸ் ‘எனும் தோல்வி படத்தையும், ‘தலைவன் தலைவி’ எனும் வணிக ரீதியான வெற்றி படத்தையும் வழங்கிய ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் ‘ட்ரெயின்’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கன்னக்குழிகாரா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ட்ரெயின்’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சுருதிஹாசன், கே. எஸ். ரவிக்குமார், டிம்பிள் ஹயாதி, பாவனா, நாசர், நரேன், கலையரசன், வினய் ராய், சம்பத் ராஜ் உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
ஃபௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் இசையமைத்திருக்கிறார். புகையிரத பயணத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கன்னக்குழி காரா முண்டக்கண்ணு வீரா ..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் கபிலன் எழுத, பின்னணி பாடகியும், நடிகையுமான சுருதிஹாசன் பாடி இருக்கிறார். மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்த பாடல் இசை ரசிகர்களின் விருப்ப பட்டியலில் இணைந்திருக்கிறது.
The post விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு appeared first on Vanakkam London.