• Sun. Mar 15th, 2026

24×7 Live News

Apdin News

விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

Byadmin

Mar 15, 2026


எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ எனும் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் எம். மணிகண்டன் – பி. அஜித் குமார் இணைந்து இயக்கியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன் ,சுதேவ் நாயர் , சிங்கம் புலி, முத்துக்குமார்,  ரிஷா, ‘அயலி ‘ நட்சத்திரா,  கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மது நீலகண்டன்- என். சண்முகசுந்தர் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணைய தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.‌

கிரைம் திரில்லர் ஜேனரிலான இந்த இணைய தொடர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் 27ஆம் திகதி முதல் பிரத்யேகமாக வெளியாகிறது.

முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் இந்த இணையத் தொடரை வெளியான உடன் பார்க்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கி இருக்கிறது.

By admin