0
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத பான் இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
பிரபல முன்னணி தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய், பிரம்மா ஜி, வி டி வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஷ்யாம் கே. நாயுடு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை புரி கனெக்ட்ஸ் மற்றும் ஜே பி மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக பிரத்தியேக காணொளியை படக்குழுவினர் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருப்பதாகவும், விரைவில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.