• Fri. Jan 17th, 2025

24×7 Live News

Apdin News

விஜய் சேதுபதி வாங்கிய முதல் சம்பளம்

Byadmin

Jan 17, 2025


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என எந்த ரோலாக இருந்தாலும் அதில் எந்த தயக்கமும் இன்றி தைரியமாக நடிப்பவர் தான் விஜய் சேதுபதி. பல படங்களில் சிறு சிறு ரோல்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் இயக்குனர் சீனு ராமசாமியால் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார்.

அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிட்சா என்ற திரைப்படத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. அப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சூது கவ்வும், நானும் ரவுடி தான், தர்மதுரை என அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக கொடுத்தார்.

ஹீரோவாக ஒருபக்கம் நடித்து வந்த விஜய் சேதுபதி விக்ரம் வேதா, பேட்ட, விக்ரம் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து வெற்றிகண்டார். மேலும் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பழமொழி படங்களிலும் நடித்து வருகின்றார் விஜய் சேதுபதி. தற்போது நடிகராக மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகின்றார்.

இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விஜய் சேதுபதிக்கு ரசிகர்களும் திரைபிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதி வாங்கிய முதல் சம்பளம் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதி நடிகராக ஆவதற்கு முன்பே துபாயில் வேலை செய்து வந்தார். அதன் பிறகு துபாய் வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிகராகும் முயற்சியில் இறங்கினார். பல படங்களில் சிறு சிறு ரோல்களில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்து வந்தார் விஜய் சேதுபதி. அவ்வாறு நடித்து வந்தபோது விஜய் சேதுபதி தன் முதல் சம்பளமாக 500 ரூபாய் வாங்கியுள்ளாராம்.

என்னதான் அதற்கு முன்பே துபாயில் விஜய் சேதுபதி சில வருடங்கள் வேலை செய்து சம்பாதித்தாலும் சினிமாவை பொறுத்தவரை அவர் வாங்கிய முதல் சம்பளம் 500 என தெரிய வந்துள்ளது. தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதியின் முதல் சம்பளம் 500 ரூபாய் என தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான மஹாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மகாராஜா திரைப்படத்திற்கு முன்பு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியை சந்தித்தது. அந்த சமயத்தில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி இருந்த விஜய் சேதுபதிக்கு எதிர்பார்த்த வெற்றியை மகாராஜா திரைப்படம் அமைந்தது. மேலும் இப்படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

நன்றி : சமயம்.காம்

 

 

By admin