• Sat. Jan 10th, 2026

24×7 Live News

Apdin News

விஜய் சேதுபதி வெளியிட்ட; வடிவுக்கரசி மிரட்டும் ‘ க்ரானி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Byadmin

Jan 9, 2026


தமிழ் சினிமாவின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகையான வடிவுக்கரசி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ க்ரானி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விஜயா குமரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ க்ரானி’ எனும் திரைப்படத்தில் வடிவுக்கரசி, சிங்கம் புலி, திலீபன்,  ஜீவி அபர்ணா,  கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஏ. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சீ. டா. பாண்டியன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜயா மேரி யுனிவர்சல் மீடியா’ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயா மேரி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கிழவி வேடத்தில் வடிவுக்கரசி வித்தியாசமான ஒப்பனை- கையில் பழங்காலத்திய ஒளி விளக்கு மற்றும் ஊன்றுகோலுடன் தோன்றுவது… ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

The post விஜய் சேதுபதி வெளியிட்ட; வடிவுக்கரசி மிரட்டும் ‘ க்ரானி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் appeared first on Vanakkam London.

By admin