• Tue. Jan 21st, 2025

24×7 Live News

Apdin News

விஜய்: பரந்தூரில் தவெக தலைவர் பேசியது என்ன? – சமூக ஊடகங்களில் என்ன விவாதம்?

Byadmin

Jan 21, 2025


விவசாயிகளுக்காக சட்டப் போராட்டம் நடத்துவேன்

பட மூலாதாரம், ANI

சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 900 நாட்களைக் கடந்திருக்கிறது.

நடிகர் விஜயின் ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ முதல் மாநாடு கடந்த வருடம், அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றபோது, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் இன்று (ஜனவரி 20) பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்துப் பேசியுள்ளார்.

விஜய் கட்சி தொடங்கியது முதல், அவர் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மட்டுமே மக்களை சந்திக்கிறார், களத்திற்கு வருவதில்லை போன்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று அவர் பரந்தூரில் மக்களை சந்தித்துள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.



By admin