0
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
பத்தரமுல்லை இராணுவ தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.
பதில் பொலிஸ் மாஅதிபரால் பொறுப்பேற்கப்பட்ட தங்கம் மற்றும் வௌ்ளி என்பனவற்றின் பெறுமதி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையூடாக மதிப்பிடப்பட்டதன் பின்னர், அவற்றை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை அடையாளப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படும் பொருட்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.