• Fri. Nov 7th, 2025

24×7 Live News

Apdin News

விடுதியில் சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு

Byadmin

Nov 7, 2025


கண்டிப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (06) விடுதி ஒன்றில் இருந்து சுற்றுலாப் பயணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கண்டி அருப்பொல,  தர்மசோக்கா மாவத்தையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இறந்து கிடந்த நிலையிலே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் சுற்றுலா விசாவின் மூலம்  இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த கெய்ட்லின் ஜூலி கிளார்க் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் மூன்று மாதங்களாக வாடகை வீட்டில் தங்கி வருகின்றார். இவர் கடந்த 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிகிரியாவுக்கு சுற்றுலா சென்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

வியாழக்கிழமை (06) பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் பிணவறைக்கு பூத உடல் அனுப்பப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin