• Tue. Dec 23rd, 2025

24×7 Live News

Apdin News

விண்கற்கள் மூலம் பெரும் லாபம் ஈட்டும் வேட்டையர்கள் – அதில் என்ன உள்ளது?

Byadmin

Dec 23, 2025


ராபர்டோ வர்காஸ்

பட மூலாதாரம், Courtesy of Roberto Vargas

படக்குறிப்பு, விண்வெளியில் இருந்து விழுந்த விண்வெளி பாறைகளைத் தேடி உலகம் முழுவதும் பயணம் செய்வதற்காக, ராபர்டோ வர்காஸ் தனது மனநல ஆலோசகர் பணியை விட்டு விலகினார்.

“வானத்திலிருந்து பணம் கொட்டாது”

இந்தப் புகழ்பெற்ற கருத்துக்கு இன்று உலகெங்கிலும் உள்ள ஒரு சிறிய, ஆனால் வளர்ந்து வரும் குழுவினர் சவால் விடுத்து வருகின்றனர்.

இவர்கள் விண்வெளியில் இருந்து விழும் விண்வெளி பாறைகளை தேடி உலகம் முழுவதும் பயணம் செய்யும் ‘விண்கல் வேட்டையர்கள்’.

அறிவியல் ஆர்வத்தைத் தாண்டி, சமீப காலங்களில் விண்வெளி பாறைகளைச் சுற்றி ஒரு லாபகரமான சந்தை உருவாகியுள்ளது.

ஒரு துண்டு விண்வெளிப் பொருளுக்குப் பெரும் தொகையை வழங்கத் தயாராக இருக்கும் தனியார் சேகரிப்பாளர்களின் ஆர்வம், ராபர்டோ வர்காஸ் போன்றவர்களை ஈர்த்துள்ளது. போர்ட்டோ ரிக்கோவில் இருந்து குடிபெயர்ந்தவர்களின் மகனான இந்த அமெரிக்கர், 2021இல் தனது வேலையை விட்டுவிட்டு உலகம் முழுவதும் விண்கற்களைத் தேடும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

By admin