• Sat. Jan 18th, 2025

24×7 Live News

Apdin News

விண்வெளித் திட்டங்களில் முன்னேறியுள்ள இந்தியா புதிய சாதனை படைத்தது!

Byadmin

Jan 17, 2025


விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இந்தியா வெற்றிகரமாக இணைத்துள்ளது. அவ்வாறு செய்யும் நாலாவது நாடு என்ற பெருமைய இந்தியா இன்று பெற்றுள்ளது.

விண்வெளி நிலையத்தை உருவாக்குவது, செயற்கைக்கோள்களைப் பழுதுபார்ப்பது போன்ற பணிகளில் செயற்கைக்கோள்கள் இணைக்கப்படுவது அவசியம். அதைச் சாத்தியமாக்கிய இந்தியா அதன் விண்வெளித் திட்டங்களில் முன்னேறியுள்ளதாக தெரிவித்து.

செயற்கைக்கோள்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உந்துகணை வழி கடந்த மாதம் 30ஆம் திகதி விண்வெளிக்கு ஒன்றாக ஏவப்பட்டன. பின்னர் விண்வெளியில் பிரிக்கப்பட்ட அவற்றை மீண்டும் இணைப்பதற்கு ஆய்வாளர்கள் முயற்சி செய்தனர். இம்முயற்சி இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டாலும் இன்று அது சாத்தியமானது.

1960களில் இருந்து நிலாவின் மேற்பரப்பில் முன்னாள் சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 5 நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி உள்ளன.

அதிலும், நிலாவின் தென்துருவத்தில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளமையும் குறிப்பித்தக்கது.

By admin