• Mon. Apr 6th, 2026

24×7 Live News

Apdin News

விண்வெளியிலிருந்து பார்க்கும் போது பூமி எப்படி இருக்கிறது? – ஆர்டெமிஸ் 2 குழு எடுத்த புகைப்படம்

Byadmin

Apr 6, 2026


'ஹலோ, வேர்ல்ட்' என்று தலைப்பிடப்பட்ட புகைப்படம்

பட மூலாதாரம், Nasa/Reid Wiseman

படக்குறிப்பு, ‘ஹலோ, வேர்ல்ட்’ என்று தலைப்பிடப்பட்ட இந்தப் புகைப்படம், ஓரியன் விண்கலத்திலிருந்து பார்க்கப்படும் பூமியைக் காட்டுகிறது.

பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான பாதி தூரத்தை ஆர்டெமிஸ் 2 விண்கலக் குழுவினர் கடந்து செல்லும்போது எடுத்த பூமியின் முதல் உயர்தரப் படங்களை நாசா வெளியிட்டுள்ளது .

விண்கலக் குழுவினர் தங்களின் இறுதி எஞ்சின் எரிப்பு செயல்பாட்டை முடித்து, நமக்கு மிக நெருக்கமான விண்வெளி அண்டை வீடான நிலவை நோக்கிய பாதையில் பயணிக்கத் தொடங்கிய பிறகு, இந்த “அற்புதமான” படங்களை அந்தத் திட்டத்தின் கமாண்டர் ரீட் வைஸ்மேன் எடுத்ததாக நாசா கூறுகிறது.

விண்கலம் ஏவப்பட்ட இரண்டு நாட்கள், ஐந்து மணிநேரம் மற்றும் 24 நிமிடங்களுக்குப் பிறகு இந்த மைல்கல் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதும், விண்கலக் குழுவினர் ஒட்டுமொத்தமாக “மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக” விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச் கூறினார்.

‘ஹலோ, வேர்ல்ட்’ என்று அழைக்கப்படும் முதல் புகைப்படம், பரந்து விரிந்த நீல அட்லாண்டிக் பெருங்கடலைக் காட்டுகிறது.

பூமி சூரியனை மறைக்கும்போது வளிமண்டலத்தின் ஒளியாலும், இரு துருவங்களிலும் தோன்றும் பச்சை நிற துருவ ஒளிகளாலும் (அரோரா) இப்படம் சூழப்பட்டுள்ளது.

By admin