விண்வெளி வீராங்கனைகள் விண்வெளியில் மாதவிடாயை எப்படி கையாள்வார்கள்?
மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு சவாலான விஷயம். விண்வெளிக்குச் செல்லும் பெண்களுக்கு, அங்கு தங்கியிருக்கும்போது மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது? அவர்கள் அதை எப்படிச் சமாளிப்பார்கள்? சுனிதா வில்லியம்ஸை போல, எதிர்பாராத விதமாக ஒரு பெண் அதிக நாட்கள் தங்க வேண்டியிருந்தால் என்ன செய்வது?
பொதுவாக பெண்கள் பயணம் செய்யும்போது, தங்களுக்கு எப்போது மாதவிடாய் ஏற்படும், அந்த நேரத்தில் பயணம் செய்வது அவசியமா என்று யோசிப்பார்கள்.
எட்டு நாட்கள் பணிக்காக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ், ஒன்பது மாதங்களுக்கும் மேலாக அங்கேயே தங்கினார். சுனிதா வில்லியம்ஸின் வயதுப்படி, அவருக்கு இந்தப் பிரச்னை இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
ஆனால் மாதவிடாயை எதிர்கொள்ளும் வயதுடைய பெண்கள் அவரைப் போல விண்வெளியில் மாதக்கணக்கில் தங்க நேர்ந்தால் என்ன செய்வது? விண்வெளியில் பெண்கள் எவ்வாறு மாதவிடாயை கையாளவார்கள் என்பது குறித்த முழு விவரங்கள் காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.