• Wed. Nov 6th, 2024

24×7 Live News

Apdin News

விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பிரதமர் மோதியை அழைத்தது ஏன்? தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதில் என்ன?

Byadmin

Nov 5, 2024


தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் - பிரதமர் நரேந்திர மோதி - இந்தியா

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, செப்டம்பர் 11ஆம் தேதி, தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டதாக பிரதமர் நரேந்திர மோதி சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

தனது வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டது குறித்து இந்தியாவின் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழ் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “தனது வீட்டில் நடந்த ஒரு தனிபட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவே பிரதமர் வருகை தந்திருந்தார், அது ஒரு பொது நிகழ்ச்சி அல்ல” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்தச் சந்திப்பில் தவறு எதுவும் இல்லை என்று தான் நம்புவதாகவும், இது சமூக நிகழ்வாக இருந்தாலும் இது நீதித் துறையினருக்கும் மற்றும் நிர்வாகத்தினருக்கும் இடையே நடைபெறும் ஒரு சாதாரண சந்திப்புதான்” என்றார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியான சந்திரசூட் நவம்பர் 10ஆம் தேதியன்று ஓய்வு பெறுகிறார். இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்கவுள்ளார்.

By admin