0
வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்குப் பிறகு கிளேட்டன்-லெ-வுட்ஸில் உள்ள A6 பிரஸ்டன் வீதியில் BMW மோட்டார் சைக்கிள், இரண்டு பாதசாரிகள் மீது மோதியதாக லங்காஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.
லங்காஷயரில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பாதசாரி ஒருவர் இறந்ததை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செஷயரில் உள்ள மேக்கிள்ஸ்ஃபீல்டைச் சேர்ந்த 50 வயதுடைய நபரும், கிளேட்டன்-லெ-வுட்ஸைச் சேர்ந்த 60 வயதுடைய பாதசாரிகளில் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அத்துடன், 60 வயதுடைய மற்றொரு பாதசாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் “தீவிரமான ஆனால் நிலையான” நிலையில் இருப்பதாக லங்காஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்த மூன்று ஆண்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
லங்காஷயரின் விட்டில்-லெ-வுட்ஸைச் சேர்ந்த 53 வயது நபர், செஷயரின் மிடில்விச்சைச் சேர்ந்த 57 வயது நபர் மற்றும் செஷயரின் காங்கிள்டனைச் சேர்ந்த 46 வயது நபர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டு, விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.