• Wed. Jun 18th, 2025

24×7 Live News

Apdin News

விமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

Byadmin

Jun 18, 2025


நடிகர் விமல் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் ஆரம்ப விழா மற்றும் படப்பிடிப்பு தமிழகத்தின் பாரம்பரிய நகரமான காரைக்குடியில் நடைபெற்றது.

மலையாள இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் & மணீஷ் கே. தோப்பில் ஆகியோர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் விமல், முல்லை அரசி, சேத்தன், சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஜிஜு ஸன்னி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை அஜித் விநாயகா  பிலிம்ஸ் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிக்கிறார்.

கிராமிய பின்னணியிலான இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறுகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் , இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

By admin